மத்திய அரசு வேளாண்மை சட்டங் களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சியில் காவிரி ஆற்றின் மணலில் புதைந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி யும், இச்சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 108 நாட்களாக விவ சாயிகள் போராட்டத்தில் ஈடுபட் டும், அதைக் கண்டுகொள்ளாத மத்திய அரசைக் கண்டித்தும், பஞ்சாபிலிலிருந்து தமிழகம் வந்த 30 விவசாயிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் ரங்கம் அருகே காவிரி ஆற்றின் மணலில் தங்களது உடலை கழுத்தளவு மறைத்துக் கொண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
இந்த போராட்டத்துக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார்.
இதில், மாவட்டத் தலைவர் மேகராஜன், பிரகாஷ், வாலை யூர் பொன்னுசாமி, மாவட்டச் செயலாளர் மரவனூர் செந்தில் குமார் மற்றும் நிர்வாகிகள் செல்லையா பிள்ளை, பழனிசாமி, அப்பாவு, சிவக்குமார், சீனிவாசன், காத்தான், ராஜவேல் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீஸார் அய்யாக் கண்ணு உள்ளிட்ட 37 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago