புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் தர்ம.தங்கவேலை மாற்றக் கோரி ஆலங்குடியில் அதிமுக வினர் சிலர் 2-வது நாளாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதி யில் இருந்து தொடங்கி வடகாடு முக்கம் வழியாக பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். அங்கு, கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
அதிமுக நிர்வாகிகள் ஞான.கலைச் செல்வம், கே.ஆர்.கணேசன், கொத்த மங்கலம் தி.பாண்டியன் உள்ளிட்டோர் பேசினர். இதில், சுமார் 800 பேர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago