திருச்சி மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளராக மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செய லாளர் கே.பத்மநாபன் அறிவிக் கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அத்தொகுதிக் குட்பட்ட வட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் சிலருடன் கருமண்டபம் பகுதி செயலாளர் ஞானசேகரன் நேற்று திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் பலமான வேட்பாளராக கே.என்.நேரு நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பத்மநாபன் மீது கட்சியினரிடத்தில் கடுமையான அதிருப்தி நிலவு கிறது. கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியுற்ற அவரால், கே.என்.நேருவை எதிர்த்து எப்படி வெற்றிபெற முடியும் எனக் கேட்கின்றனர்.
கட்சிக்காக அவர் செலவில் எந்த நிகழ்ச்சியும் நடத்தி யதில்லை. நலத்திட்ட உதவிகளும் வழங்கியதில்லை. எனவே, இந்த வேட்பாளரைக் கண்டித்து கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட முயற்சித்தனர். அப்போது தலைமையின் அறிவிப்புக்கு எதிராக செயல்பட வேண்டாம் என அறிவுறுத்தி, அவர்களை சமாதானம் செய்தோம்.
அதைத்தொடர்ந்து, வேட்பாளர் மீதான அதிருப்தியை ஊடகங்கள் வாயிலாக தற்போது தலைமையின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளோம். முதல்வர், துணை முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago