திருச்சியை மநீம கோட்டையாக மாற்றுவோம் : திருவெறும்பூர் வேட்பாளர் முருகானந்தம் கருத்து

By செய்திப்பிரிவு

மக்கள் நீதி மய்யத்தின் திருவெறும்பூர் தொகுதி வேட்பாளரான அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் (அமைப்பு) முருகானந்தம், திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் வீரசக்தி ஆகியோர் நேற்று விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சிக்கு வந்தனர். விமானநிலையத்தில் அவர்களுக்கு அக்கட்சியினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் முருகானந்தம் அளித்த பேட்டி:

மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து வேட்பாளர்களும் இத்தேர்தலில் வெற்றி பெறுவோம்.

திருவெறும்பூர் தொகுதியில் எவ்வித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. இங்குள்ள தொழிற்சாலைகள் நலிவடைந் துவிட்டன.

அரியமங்கலம் குப்பைக் கிடங்கு, சர்வீஸ் சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. திருவெறும்பூர் தொகுதிக்கு அதிமுக, திமுக எதுவும் செய்யவில்லை. நாங்கள் வெற்றி பெற்றதும் மக்களின் தேவைகளை அறிந்து, அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவோம். திருச்சியை மக்கள் நீதி மய்யத்தின் கோட்டையாக மாற்றுவோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்