திருச்சி மாவட்டத்தில் ஒரு தொகுதிகூட ஒதுக்காததைக் கண்டித்து - காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் :

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் ஒரு தொகுதிகூட ஒதுக்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று தொடங்கியுள்ளனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங் களுக்கான வேட்பாளர் தேர்வைக் கண்டித்து சென்னையில் எம்.பி விஷ்ணுபிரசாத் தலைமை யிலான காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதிகூட ஒதுக்கப்படாததைக் கண்டித்து திருச்சி மெயின்கார்டுகேட் அருகேயுள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான அருணாசல மன்றத்தில் மாநில பொதுச் செயலாளர் சரவணன் தலைமையில் திருச்சி வேலுச்சாமி உள்ளிட்ட 20 பேர் நேற்று மாலை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள் ளனர்.

இதுகுறித்து திருச்சி வேலுச் சாமி கூறும்போது, ‘‘திருச்சி மாவட்டத்தில் தற்போது ஒரு தொகுதியில்கூட காங்கிரஸ் போட்டி யிடவில்லை. சுதந்திரத்துக்குப் பின் இந்த மாவட்டத்தில் காங்கி ரஸ் கட்சி போட்டியிடாதது இது தான் முதல்முறை. கூட்டணி பேச்சுவார்த்தையில் பங்கேற்ற வர்கள் என்ன பேசினார்கள் எனத் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியை அழித்துவிட்டனர். இதை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளோம்.

இன்று தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இதை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற போராட்டங்கள் மூலம் தலைமை யின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம்.

இதை கட்சியின் அகில இந்திய தலைமை உணர்ந்து கொண்டு, சரி செய்ய முயற்சிக்க வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்