வேலூர் மாவட்டத்தில் 8,560 பேருக்கு தேர்தல் பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப் பட்ட நிலையில் மருத்துவ காரணங்களைக் கூறி தேர்தல் பணியில் இருந்து யாருக்கும் விலக்கு அளிக்க முடியாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேகமாக நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,783 வாக்குச் சாவடிகளில் காட்பாடி தொகுதியில் 349, வேலூர் தொகுதியில் 364, அணைக்கட்டு தொகுதியில் 351, கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் 311, குடியாத்தம் (தனி) தொகுதியில் 408 வாக்குச்சாவடிகள் உள்ளன.
வாக்குச்சாவடிகளில் பணியாற் றுவதற்காக காட்பாடி தொகுதி யில் 1,964 பேர், வேலூரில் 2,029 பேர், அணைக்கட்டில் 1,951 பேர், கே.வி.குப்பத்தில் 1,278 பேர், குடியாத்தத்தில் 1,338 பேர் என மொத்தம் 8,560 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி ஒதுக்கீடு கணினி குலுக்கல் முறையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இவர்களுக்கு அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதி வாரியான பயிற்சி வகுப்புகள் வரும் 21-ம் தேதி மற்றும் 28-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. வேலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு டிகேஎம் மகளிர் கல்லூரி, காட்பாடி தொகுதிக்கு காட்பாடி வாணி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, அணைக்கட்டு தொகுதிக்கு புரம் ஸ்பார்க் மெட்ரிக் பள்ளி, கே.வி.குப்பம் (தனி) தொகுதிக்கு குடியாத்தம் கே.எம்.ஜி கலை கல்லூரி, குடியாத்தம் (தனி) தொகுதிக்கு திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளன.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 8,560 பேருக்கான பணி ஒதுக்கீடு ஆணை வழங்கும் பணி நேற்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணி ஆணைகளை ஆட்சியர் சண்முகசுந்தரம் வழங் கினார்.
கூட்டத்தில் ‘‘மருத்துவக் காரணங்களை கூறி தேர்தல் பணியில் இருந்து யாரும் விலக்கு பெற முடியாது. அவசர மருத்துவ அறுவை சிகிச்சையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மட்டும் மருத்துவ சான்றை உறுதி செய்த பின்னரே விலக்கு அளிக்கப்படும். மற்றவர்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் விலக்கு அளிக்க முடியாது’’ என தெரிவிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago