ஆறு மாத காலப் படிப்பில் 31 இளம் விவசாயிகள் பதிவு செய்தனர். நிகழ்வில், கோவை வேளாண்பல்கலைக் கழகத்தின் துணைவேந் தர் என். குமார் தலைமை வகித்து பேசும்போது ‘‘அனுபவம் வாய்ந்த விவசாயிகளும், தொழில்நுட்பம் அறிந்த விஞ்ஞானிகளும் இணைந்து செயல்பட்டால் வேளாண் உற்பத்தியைப் பெருக்க முடியும். இந்த தென்னை வளர்ப்பு தொழில்நுட்பக் கல்வியின் மூலம்,தரமான கன்று உற்பத்தி செய்வதுமுதல் மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது வரையிலான தொழில்நுட் பங்களை கற்றுக்கொள்ளமுடியும்’’ என்றார்.
விரிவாக்க கல்வி இயக்ககத்தின் இயக்குநர் மு. ஜவஹர்லால் வாழ்த்தி பேசினார். தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் மு.அனந்தன் பேசும்போது ‘‘தொழில்நுட்பப் படிப்பில் கலந்து கொண்ட விவசாயிகள், மாணவர்களாக மாறி தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ளவேண்டும்’’ என்றார்.
தென்னை சாகுபடி தொழில்நுட்பக் கல்வியின் ஒருங்கிணைப் பாளர் க. ராஜமாணிக்கம் பேசும் போது ‘‘தென்னையில் 80-க்கும் மேற்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை, உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்களை அறிந்து விவசாயிகள் பயன்பெற வேண்டும்’’ என்றார். தொலைதூரப்படிப்பின் பயிற்சி ஏடு வெளியிடப் பட்டது. அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் நா.ஆனந்தராஜா மற்றும் கதிரவன் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago