திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 1043 வாக்குச்சாவடி மையங்களிலும், இன்று (மார்ச் 13) மற்றும்நாளை (மார்ச் 14) இரு நாட்களில் ‘இ-எபிக்’ சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளதாவது:
தேர்தல் ஆணையத்தால், கடந்த ஜன.25-ம் தேதியன்று நடைபெற்ற 11-வது தேசிய வாக்காளர்தினத்தில் அனைத்து வாக்காளர் களும் தங்களது வாக்குப்பதிவு விவரங்களை அறிந்துகொள்ள ஏதுவாக ‘இ-எபிக்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக ஒவ்வொரு வாக்காளரும் தங்களது மின்னணு அடையாள அட்டையை ‘இ-எபிக்’ (e-EPIC) மூலம் மிகவும் எளிதாக ஆன்ட்ராய்டு செல்போன் மற்றும் கணினியின் மூலம் பதிவிறக்கம் செய்து, அச்சடித்துக்கொள்ள முடியும்.
முதல்கட்டமாக நடைபெற்று முடிந்த சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் -2021-ல் 18 வயது பூர்த்தியடைந்து, யுனிக் செல்போன் எண்ணைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் புதிதாக இணைந்த இளம்வாக்காளர்கள் தங்களது வாக்காளர் விவரங்களை http://votersportal.eci.gov.in/ என்ற இணையதளம் மற்றும் voters helpline என்ற செல்போன் செயலி மூலமாக தங்களது ‘இ-எபிக்’கை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இ-எபிக் முறையை அனைத்து வாக்காளர்களும் அறிந்து கொள்ளும் விதமாகவும், வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொண்ட அனைத்து இளம் வாக்காளர்கள் விவரத்தை பதிவிறக்கம் செய்ய ஏதுவாக திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 1,043 வாக்குச்சாவடி மையங்களிலும் இன்றும், நாளையும் ‘இ-எபிக்’ சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago