திருப்பூர் மாவட்டம் பல்லடம் கல்லம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. கூலித் தொழிலாளி. இவரது மகள் சுபாஷினி (10).
வீட்டின் அருகே பல்லடம்- மங்கலம் சாலையில் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கார் மோதியதில், சிறுமி பலத்த காயமடைந்தார். அவரை மீட்ட பெற்றோர், அங்கிருந்தவர்கள் உதவியுடன் பல்லடம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு, சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago