திருவள்ளூர் மாவட்டத்துக்கு 5 தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளனர். அவர்களிடம் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை மொபைல் போன், மின்னஞ்சல், வாட்ஸ்-அப் வாயிலாக தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரின் கீழ் உள்ள கும்மிடிப்பூண்டி, திருத்தணி, மாதவரம், திருவொற்றியூர் உள்ளிட்ட 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளனர்.
அவர்களிடம், தேர்தல் தொடர்பான புகார்கள் இருப்பின் மொபைல் போன், மின்னஞ்சல், வாட்ஸ்-அப் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கலாம். புகார் அளிப்பவர்களின் விவரங்கள் அனைத்தும் ரகசியம் காக்கப்படும் என தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மார்ச் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை, மார்ச் 22-ம் தேதி முதல் ஏப். 6-ம் தேதி வரை, மே 27-ம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி வரை என 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் செலவின கணக்கு பார்வையாளர்கள் பணியில் இருப்பர்.
அதன்படி கீழ்க்கண்ட தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர்கள் - சட்டப்பேரவை தொகுதி - மொபைல் எண்/ வாட்ஸ்-அப் - மின்னஞ்சல் முகவரி- புகாரை நேரில் தெரிவிக்க வேண்டிய முகவரி.
சஞ்சய் முகர்ஜி - கும்மிடிப்பூண்டி, பொன்னேரி(தனி)- 8015234771-eogpd2021@gmail.com/eopni2021@gmail.com-NTECL விருந்தினர் மாளிகை, வல்லூர்.
சுதன்சூ ராய் - திருத்தணி, திருவள்ளூர்- 8015234772-eotrt2021@gmail.com/eotvlr2021@gmail.com- மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள விருந்தினர் மாளிகை.
சொய்க்கன்தாங் -பூந்தமல்லி(தனி), ஆவடி- 8015234774-eopme2021@gmail.com/eoavd2021@gmail.com -CVRDE விருந்தினர் மாளிகை, ஆவடி.
திரிப்பாதி- மதுரவாயல், அம்பத்தூர் -8015234775-eomdu2021@gmail.com/eoamb2021@gmail.com-மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள விருந்தினர் மாளிகை.
சிவபிரகாஷ் வி பட்டி- மாதவரம், திருவொற்றியூர் -8015234776-eomad2021@gmail.com/eotvt2012@gmail.com -மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள விருந்தினர் மாளிகை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago