கரோனா விதிகளை பின்பற்றாதோரிடம் - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை ரூ.14 லட்சம் வசூல் :

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாதவர்களிட மிருந்து ரூ.13 லட்சத்து 83 ஆயி ரம் வசூல் செய்திருப்பதாக மாவட்டஆட்சியர் கிரண் குராலா தெரிவித் துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆந்திரா, புதுச்சேரி மற்றும்கர்நாடகா ஆகிய மாநிலங்களைத் தவிர்த்து பிற வெளி மாநிலங்களில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட் டத்திற்குள் வருபவர்கள் இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும்.அண்டை மாநிலங்களில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனவே, பொதுமக்கள் அனை வரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், அடிக்கடி கைகளை கழுவுதல் போன்றவற்றை பின்பற்ற வேண் டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் கள்ளக்குறிச்சி நகராட்சிஆகியவற்றின் மூலம் கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத நபர்களிடம் அபராதத் தொகையாக ரூ.13,33,300 வசூலிக் கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி பின்பற்றாத நபர்களிடம் ரூ.35,000, கடைகளில் கூட்டமாக சமூக இடைவெளி பின்பற்றாத நபர்களிடம் ரூ.5,000, கரோனா நோயாளிகள் உள்ள பகுதிகளில் கடைத் திறந்து வைத்து சமூக இடைவெளி பின்பற்றாத நபர்களிடம் ரூ.10,500 உட்பட இது வரை மொத்தம் ரூ.13,83,800 அபராதத் தொகையாக வசூலிக் கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர வேண்டும். அவ் வாறு வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அவ்வாறு முகக்கவசம் அணி யாமல், சமூக இடைவெளியை பின்பற்றாத நபர்களுக்கு அப ராதம் விதிக்கப்படும் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாத நபர்களிடம் அபராதத் தொகையாக ரூ.13,33,300 வசூலிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளி பின்பற்றாத நபர்களிடம் ரூ.13,83,800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்