திருவாரூரில் வேட்புமனு தாக்கலுக்காக - போக்குவரத்தை தடை செய்வதை எதிர்த்து ஆட்சியரிடம் மனு :

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகமான கோட்டாட்சியர் அலுவலகம் செயல்படும் தெற்கு வீதியில் முழுமையாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

இதனால், தெற்கு வீதி மற்றும் கீழவீதியில் செயல்படும் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வங்கி ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

திருவாரூரில் நடைபெற உள்ள ஆழித் தேரோட்டத்துக்காக கடந்த வாரம் முதல் கீழவீதியில் முழுமையாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வேட்புமனு தாக்கலுக்காக நேற்று முதல் தெற்கு வீதியிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள், வியாபாரிகள், நோயாளிகள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, வேட்பு மனு தாக்கலை காரணம் காட்டி தெற்கு வீதியில் போக்குவரத்தை தடை செய்யக்கூடாது என தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் திருவாரூர் ஆட்சியர் வே.சாந்தாவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்