திருப்பத்தூர் திமுக வேட்பாளரை மாற்றக்கோரி - எம்எல்ஏ அலுவலகத்தில் அதிருப்தியாளர்கள் ரகளை :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூரில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அலுவல கத்தை அதிருப்தியாளர்கள் நேற்று அடித்து நொறுக்கினர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இதில், திருப்பத்தூர் தொகுதிக்கு தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள நல்லதம்பிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையறிந்த அதிருப்தியாளர் கள் திருப்பத்தூர் ஈத்கா சாலையில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பியின் அலுவலகத்துக்கு சென்று அங்கு ரகளையில் ஈடுபட்டனர். அங்கு பணியில் இருந்த பெண் மீது தாக்குதல் நடத்தினர். பிறகு அலுவலகத்தில் இருந்த நாற்காலிகள், மேஜைகளை தூக்கி வீசி தகராறு செய்து, அங்கு பணியாற்றி வந்தவர்களுக்கு அதிருப்தியாளர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதைக்கண்டு அஞ்சிய அலுவலக ஊழியர்கள் அங்கிருந்து வெளியே ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் பேபி தலைமையிலான காவல் துறையினர் அங்கு விரைந்து சென்றனர். இதையறிந்த அதிருப்தியாளர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

பிறகு, அலுவலகப் பணியாளர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இந்த முறை நகரச்செயலாளராக உள்ள எஸ்.ராஜேந்திரன் என்பவர் தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அக்கட்சியினர் எதிர்பார்த்தனர், ஆனால் கட்சி தலைமை தற்போது எம்எல்ஏவாக உள்ளநல்லதம்பிக்கு வாய்ப்பு வழங்கப் பட்டதால் அதிருப்தியடைந்த திமுகவினர் திருப்பத்தூர் திமுக வேட்பாளரை மாற்ற வேண்டும் இல்லையென்றால் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ டி.கே.ராஜா வெற்றிபெற அதிக வாய்ப் புள்ளதாக கூறி திமுக வேட்பாளர் நல்லதம்பியை மாற்றக்கோரி திமுகவினர் குரல் கொடுத்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்