திருப்பூர் மாவட்டத்தில் ரூ.3.32 லட்சம் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

திருப்பூர் அடுத்த வஞ்சிபாளையம் பகுதியில், திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நிலைக்குழு அதிகாரி முத்துதாமஸ் தலைமையிலான குழுவினர் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஒரு காரில் ரூ.2 லட்சத்து 32000 இருந்தது. காரில் வந்தவர் சத்தியமங்கலத்தில் நிறுவனம் நடத்தி வந்ததும், பணத்துக்கு உரியஆவணங்கள் இல்லாததும்தெரியவந்தது. இதையடுத்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு, தொகுதி தேர்தல் நடத்தும்அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.பல்லடம் அருகேவடக்கு அவிநாசிபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தாராபுரத்தை சேர்ந்த உர வியாபாரி ஆவணங்கள் இன்றி ரூ.1லட்சம்கொண்டு வந்தது தெரிய வந்தது. பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து, பல்லடம் வட்டாட்சியர்அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்