தமிழகத்தில் வருகிற 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது,
அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2-வது பட்டியல் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. இதில், கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளராக, அதிமுகவின் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் செந்தில்குமார் அறிவிக்கப்பட்டார். இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரி வித்து கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி தொகுதிக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட் பாளரை மாற்றிவிட்டு, முன்னாள் எம்எல்ஏ. அழகுவேல்பாபுவை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனமுழக்கங்கள் எழுப்பினர். போலீஸார்வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடச் செய்தனர்.
இதற்கிடையே நேற்று நகர செயலாளர் பாபு தலைமையில் மீண்டும் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது வெங்கடேசன் என்பவர் திடீரென தன்மேல் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினார்.
போலீஸார் வெங்கடேசனை தடுத்து நிறுத்தி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago