மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் தேனி மாவட்டம் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோடை காலம் தொடங்கி யதைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை குளிர்காற்று வீசத் தொடங்கியது. தொடர்ந்து தேனி, உத்தமபாளையம், ஆண்டி பட்டி, வருசநாடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் கனமழை பெய்தது.
ஒரே நாளில் கொட்டித் தீர்த்த கனமழையால் சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கொட்டக்குடி, வராகநதி, முல்லை பெரியாறு, பாம்பனாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
குறிப்பாக வருசநாடு, வெள்ளி மலை, பொம்மிராஜபுரம் உள்ளிட்ட நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழையால் மூல வைகை ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, துரைராஜபுரம் உள்ளிட்ட பகுதி வழியாகச் செல்லும் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. நேற்று முன்தினம் வரை வைகைஅணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில், தற்போதைய திடீர் மழையால் நேற்று விநாடிக்கு 721 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதேநேரம் முல்லை பெரியாறு அணைக்கு நேற்று 2,554 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. வைகை அணையில் 63.5அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று மாலை 64.2 அடியாகவும், பெரியாறு அணையில் 127.90 அடியாக இருந்த நீர்மட்டம் 129 அடியாகவும் உயர்ந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago