சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, வேட்புமனு தாக்கலின்போது கடைப்பிடிக்க வேண்டியவழிமுறைகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும்,ஆட்சியருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில், அனைத்துஅங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரமுகர் களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஆட்சியர் பேசியதாவது: சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்மார்ச் 12-ம் தேதி தொடங்கி 19-ம்தேதி 3 வரை நடக்கிறது. காலை 11 மணி முதல் வேட்புமனு அளிக்கலாம். 13 மற்றும் 14 ஆகிய இரு நாட்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுடன் இரண்டு நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் 2 வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். வேட்பாளர்கள் வைப்புத்தொகையாக ரூ.10,000 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வேட்பாளர்களாக இருந்தால் ரூ.5,000 செலுத்தவேண்டும்.
பேலட் பேப்பரில் தாங்கள் போட்டியிடும் சின்னம் மற்றும் புகைப்படம் ஒட்டப்படவுள்ளதால், தெளிவான புகைப்படத்தினை அளிக்க வேண்டும். அபிடெவிட் தாக்கல் செய்யும்போது முழுமையாக பூர்த்தி செய்து தாக்கல் செய்யவேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2021 வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்போது படிவம் 6-ல் தங்களது தனிப்பட்ட கைப்பேசி எண்ணை குறிப்பிட்டிருந்த வாக்காளர்களுக்கு, அவர்களது மின்னணுவாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய ஏதுவாக வரும்13 மற்றும் 14-ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago