ஆனைமலையாறு- நல்லாறு திட்டம்உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காவிட்டால், சட்டப்பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்அறிவித்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கானகட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஏ.கே.சண்முகம் தலைமை வகித்தார். செயலாளர் கே.சந்திரசேகர், பொருளாளர் தங்கராஜ், துணைத் தலைவர் பி.சண்முகசுந்தரம், திருப்பூர் மாவட்ட தலைவர் எம்.ஈஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தமிழக அரசு கூட்டுறவு வங்கி களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.12150 கோடியை தள்ளுபடி செய்ததற்கு நன்றியைதெரிவித்துக் கொள்கிறோம்.இதேபோல, தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளில் பெற்ற கடனையும்தள்ளுபடி செய்ய வேண்டும். வாக்குறுதி அளித்தபடி, ஒப்பந்தக் கூலி கிடைக்காமல் நலிவடைந்த விசைத்தறியாளர் மூலதனக் கடன் ரூ.65 கோடியை முதல்வர் பழனிசாமிதள்ளுபடி செய்ய வேண்டும்.
விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக கரும்பு ஆலைகள் வழங்க வேண்டும். எம்.எஸ்.சாமிநாதன் கமிட்டி அறிக்கையின்படி, விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தேனிமாவட்டம் கோம்பை பகுதியில்போதிய தண்ணீர் வசதி இல்லாத தால், கடும் வறட்சி பகுதியாக உள்ளது. முல்லைபெரியாறு அணையில் இருந்து வரும் தண்ணீரை, தடுப்பணை கட்டி வாய்க்கால் அமைத்தால் அப்பகுதியில் உள்ள நிலங்களில் விவசாயம் செய்வதற்கு வசதியாக இருக்கும். போர்க்கால அடிப்படையில் தடுப்பணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து, செய்தியா ளர்களிடம் மாநிலத் தலைவர் ஏ.கே.சண்முகம் கூறும்போது, "விவ சாயிகளின் கோரிக்கையை ஏற்கும் கட்சிகளுடன், சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைப்போம். இல்லையென்றால், காங்கயம், பல்லடம், சூலூர், கிணத்துக்கடவு மற்றும் கரூர் மாவட்டங்களில் இரண்டு என 6 தொகுதிகளில் போட்டியிடுவோம்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago