திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேர வைத் தொகுதிகளுக்குரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் பிரித்து அனுப்பும் பணிநடந்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக, திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குமரன் கல்லூரியிலும் வைக்கப்பட்டுள்ளன.
இதனை ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைத்தார்.
வருவாய் அலுவலர் கு.சரவண மூர்த்தி, மாநகராட்சி ஆணையர் க.சிவக் குமார், கோட்டாட்சியர் ஜெகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
உடுமலை
உடுமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவுஇயந்திரங்கள், அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையிலும், தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா தலைமையிலும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. 380 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான 456 கட்டுப்பாட்டுக் கருவிகள், 456 வாக்குப்பதிவுஇயந்திரங்கள், 494 விவிபேட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான ராமலிங்கம், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் கிருஷ்ணவேணி, கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் விவேகானந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago