நாமக்கல் - திருச்சி மாவட்ட எல்லையில் தோளூர்ப்பட்டியில் உள்ள கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது.
கல்லூரி சேர்மன் பெரியசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். செயலாளர் பிஎஸ்டி கன்ஸ்ட்ரக்சன்ஸ் தென்னரசு முன்னிலை வகித்தார். ரேடியோ அறிவிப்பாளர் யுவ பங்கேற்று நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்துப் பேசினார். தொடர்ந்து கல்லூரி மாணவியருக்கு ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் செயல்திறன் போட்டிகள் நடைபெற்றன.
பெண்கள் வளர்ச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் டாக்டர் நித்யா, பொறியியல் கல்லூரி முதல்வர் அசோகன், டீன் அலுவலர் யோகப்பிரியா, கொங்குநாடு பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பி.எட் கல்லூரி மாணவியர் விழாவில் கலந்துகொண்டனர். இணை பேராசிரியர் அமுதா நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago