திருவாரூர்- காரைக்குடி அகல ரயில் பாதையில் - தேவையான கேட்கீப்பர்களை நியமித்து அனைத்து ரயில்களையும் இயக்க கோரிக்கை :

திருவாரூர்- பட்டுக்கோட்டை- காரைக்குடி அகல ரயில்பாதையில் தேவையான கேட்கீப்பர்களை உடனடியாக நியமித்து, வரும் தமிழ்ப் புத்தாண்டு முதல் அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

அறந்தாங்கி கோட்ட ரயில் உபயோகிப்போர் சங்க செயலாளர் ஏ.பி.ராஜ்குமார், பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் என்.ஜெயராமன், ஒருங்கி ணைப்பாளர் எம்.கலியபெருமாள், அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நலச் சங்கச் செயலாளர் அ.அப்துல் ரஜாக் ஆகியோர், திருச்சி கோட்ட ரயில்வே அலுவலகத்தில், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அஜய்குமாரை அண்மையில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பது:

திருவாரூர்- பட்டுக்கோட்டை- பேராவூரணி- அறந்தாங்கி- காரைக்குடி அகல ரயில்பாதையில் உள்ள ரயில்வே கேட்டுகளுக்கு, போதுமான அளவு கேட்கீப்பர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். வரும் தமிழ்ப் புத்தாண்டு முதல், இந்த வழித்தடத்தில் காரைக்குடி- சென்னை இரவுநேர விரைவு ரயிலை இருமுனைகளிலிருந்தும் இயக்க வேண்டும். மேலும் இந்த வழித்தடத்தில் அனைத்து ரயில் களையும் உடனடியாக இயக்க வேண்டும். மொபைல் கேட் கீப்பர்கள் மூலமாக கழிப்பறை வசதிகள் இல்லாத டெமு ரயில்களை இயக்குவதால், 150 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க 7 மணி நேரம் ஆகிறது.

மேலும், ரயிலில் கழிப்பறை வசதிகள் இல்லாததால் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே, 72 ரயில்வே கேட்டுகளுக்கும் கேட்கீப்பர்களை நியமித்த பின்னர் ரயில்களை இயக்க வேண்டும். தற்போது, ரயில்வே கேட்டில் பணிபுரியும் முன்னாள் ராணுவத்தினரின் ஒப்பந்த பணிக்காலம் வரும் மே மாதத்தில் நிறைவுறுவதால், அவர்களுக்கு பணிநீட்டிப்பு வழங்க ரயில்வே நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட ரயில்வே கோட்ட மேலாளர், “ரயில்வே கேட்டுகளுக்கு பணியமர்த்த தேவையான கேட்கீப்பர் களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தேர்வு செய்த பின்னர், மருத்துவ பரிசோதனை மற்றும் முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு, வரும் ஜூன் மாதத் தில் பணியமர்த்தப்படுவார்கள்.

மேலும், தற்போது கேட்டுகளில் பணிபுரிந்து வரும் முன்னாள் ராணுவத்தினரின் பணிக்காலத்தை நீட்டிப்பு செய்ய டெல்லி ரயில்வே வாரியத்துக்கு கடிதம் அனுப் பப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE