திருச்சி-மதுரை தேசிய நெடுஞ் சாலையில் துவரங்குறிச்சி முக்கன்பாலம் அருகே 15-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை சாலை பணியில் ஈடுபட்டி ருந்தனர்.
அப்போது, மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வந்த கார், சாலையின் மையத்தடுப்பில் மோதி, சாலை பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதும் மோதி இடதுபுறத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பளுவஞ்சியைச் சேர்ந்த போதும்பொண்ணு(50), கோட்டை பளுவஞ்சியைச் சேர்ந்த தங்கமணி(29) ஆகியோர் அந்த இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த பூலாங் குளம் பகுதியைச் சேர்ந்த வள்ளி கண்ணுவை(40) திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago