ஜேஇஇ அகில இந்திய தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாஸ்டர்ஜியில் படித்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மாஸ்டர்ஜி நிறுவனம் சார்பில் ‘நீட்' மற்றும் ஜேஇஇ தேர்வுக்கான பயிற்சியை அளித்து வருகிறது. இந்தாண்டு முதல் ஜேஇஇ தேர்வு ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்படுகிறது. பிப்ரவரி மாதம் நடைபெற்ற முதல் தேர்வின் முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், மாஸ்டர்ஜி பயிற்சி மையத்தில் சிருஷ்டி பள்ளி மாணவர் பிரணவ் (99.89) மதிப்பெண் பெற்றுள்ளார்.
அதேபோல், தனஞ்செயன் (99.10), ஷெரில் சூசன் மேத்யூ (96.78), அமித் ஜார்ஜ் (98.70), ஈரோடு சி.எஸ்.அகாடமி பள்ளி மாணவர்கள் மதுவர்ஷன் (99.46), வினு ராகவ் (98.47), திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் அக் ஷரா பள்ளி மாணவர் தேஜா அஜித் (96.33) ஆகியோர் மதிப்பெண் பெற்றுள்ளனர். வெற்றிபெற்ற மாணவர்களை மாஸ்டர்ஜியின் தலைவர் ராஜேந்திரன், முதன்மை செயல் அலுவலர் சரவணன் ஆகியோர் பாராட்டினர்.
மாஸ்டர்ஜி சார்பில் 5 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‘டேலன்ட் சர்ஜ்’ தேர்வு இறைவன்காட்டில் உள்ள ஸ்பிரிங்டேஸ் பள்ளியில் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மாஸ்டர்ஜி சார்பில் அடுத்த ஆண்டு நடைபெறும் பயிற்சி வகுப்பில் உதவித் தொகைக்கான பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago