அனைத்து பனியன் தொழிற்சங்கக் கூட்டம், திருப்பூர் சிஐடியு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. சிஐடியு நிர்வாகி சி.மூர்த்தி தலைமை வகித்தார். என்.சேகர் (ஏஐடியுசி), ஜி.சம்பத்(சிஐடியு), பூபதி (எல்பிஎஃப்), ஏ.சிவசாமி (ஐஎன்டியுசி), விஸ்வநாதன் (ஏடிபி), முத்துசாமி (ஹெச்எம்எஸ்), மனோகரன் (எம்எல் எஃப்) ஆகியோர் பங்கேற்றனர்.
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையாலும், அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில்இருந்து பருத்தி உள்ளிட்ட பொருட்களை விலக்கி தங்குதடையின்றி ஏற்றுமதி செய்வதாலும், பதுக்கலாலும் செயற்கையாக விலையேற்றம் நடைபெறுகிறது. விலையேற்றம் என்பது ஆண்டுக் கணக்கு, மாதக் கணக்கு என்பதை தாண்டி தற்போது தினசரி என்று நடைபெற்று வருகிறது. இதனால், குறிப்பிட்ட மாதங்களுக்கு முன்பு தொகை தீர்மானித்து ஆர்டர் எடுக்கும் உற்பத்தியாளர்கள், குறிப்பிட்ட தேதியில் ஆர்டரை முடித்து கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், திருப்பூர் பனியன் தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து, தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே,தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையில்,பருத்தி உள்ளிட்ட மூலப்பொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலுக்குள் மத்திய அரசு கொண்டுவர வேண்டும். மேலும், பருத்தி நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். இதைவலியுறுத்தி அனைத்து உற்பத்தியாளர் சங்கங்கள் மேற்கொள்ளும் போராட்டங்களுக்கு முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago