குண்டர் சட்டத்தில் இருவர் கைது :

By செய்திப்பிரிவு

யானைக்கு தீ வைத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே மாவனல்லா பகுதியில்உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்ற காட்டு யானைக்கு தீ வைத்த சம்பவத்தில் தனியார் விடுதி உரிமையாளரின் மகன் ரேமண்ட் டீன் மற்றும் கூலித் தொழிலாளி பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளனர். இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, வனத் துறை பரிந்துரைத்தது.

இதன்பேரில், சிறையில் உள்ள ரேமண்ட் டீன் மற்றும் பிரசாத் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நேற்று உத்தரவிட்டார். இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கே.கே.கவுசல் கூறும்போது, ‘‘நீதிமன்றக் காவலில் உள்ள இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். குன்னூர் கிளைச் சிறையில் உள்ளவர்களிடம் நாளை (இன்று) சிங்காரா வனச் சரகர் உத்தரவை வழங்கிய பின்னர், இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்படுவர்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்