செங்கை மாவட்டத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு - கணினி குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு :

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் கணினி குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அடுத்த மாதம் 6-ம்தேதி ஒரேகட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர், திருப்போரூர் மதுராந்தகம்(தனி), செய்யூர் (தனி) ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 3,833 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் பயன்படுத்தப்பட வேண்டிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரம், கணினி குலுக்கல் முறையில் பிரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த தொகுதிகளில் தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, வாக்குப் பதிவு நாளுக்கு முன்னதாக வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு தேர்தல் அலுவலர் கூறினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் தேவைப்படும் எண்ணிக்கையைவிட 20 சதவீத வாக்குப்பதிவு இந்திரங்களும், 30 சதவீத வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரங்களும் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படும்பட்சத்தில் இந்தக் கூடுதல் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்