காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, செங்கல்பட்டு ஆட்சியர் ஜான்லூயிஸ்ஆகியோர் வெளியிட்ட அறிக்கையின் விவரம்:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2021-ன் போது புதிதாக வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் தங்களது செல்போன் எண்ணை வழங்கிய வாக்காளர்கள் அனைவருக்கும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ள சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
வரும் மார்ச் 13, 14 ஆகிய தேதிகளில் (சனி மற்றும் ஞாயிறு) இந்த சிறப்பு முகாம் நடைபெறும். முதன்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் இந்த முகாமை பயன்படுத்தி தங்களது மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago