மது வகைகளை கொடுத்து, வாக்களிக்க வைத்தால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவ லரும் ஆட்சியருமான கிரண் குராலா எச்சரித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட் சியர் அலுவலக வளாகத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் ஆலோ சனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் கிரண் குராலா தலைமையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியா வுல்ஹக் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய மாவட்டதேர்தல் அலுவலர், “தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் இக்காலங்களில் மது பானங்களை முறைகேடாக பதுக்கி வைத்தல் மற்றும் கடத்துபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்தலில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு மதுபானம் வழங்கப்படுவதை கண்காணித்து தடுத்திட வேண்டும். அவர்கள் மீது தேர்தல் விதிகளின் கீழ் உடனடியாக நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் அரசு நிர்ணயித்த கால அளவான நண்பகல் 12 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும், அதனை மீறுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலி மதுபான விற்பனைகள் மற்றும் முறைகேடான கள்ளச்சாராய விற்பனை குறித்து பறக்கும் படை யினர் பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டாஸ் மாக் மாவட்ட மேலாளர், மது விலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் கூட்டாக இணைந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
மது விற்பனைக்கு கூப்பன் அல்லது டோக்கன்கள் ஏதும் வழங் கப்பட்டு அதற்காக மதுபானங்கள் விற்பனை கூடங்களில் வழங் கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு விற்கப்படுமானால் சம்மந்தப்பட்ட கடையின் கண்காணிப்பாளர் மற்றும் விற்பனையாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.முறைகேடாக மலிவான மதுபானங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் பதுக்கி வைக்கப்படுகிறதா என் பதை கண்காணித்திட வேண்டும். பிரதான சாலையிலிருந்து ஒதுக்குபுறமாக உள்ள மதுபான கடைகள்,குக்கிராமங்களில் உள்ள கடைக ளில் விதிமீறல்கள் உள்ளனவா எனக் கண்காணித்திட வேண்டும்” என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வரு வாய் அலுவலர் சி.விஜய்பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முகத் உதவியாளர் டி.சுரேஷ்,கலால் உதவி ஆணையர் சரவணன், காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன், கோட்ட கலால் அலுவ லர் ராஜராஜன், மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர்கள் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago