விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தலைமையேற்ற கல்லூரியின் இணை செயலாளர் நிஷா செந்தில் குமார், பெண் கல்வியின் அவசியம், பெண் தொழில் முனைவோராகும் வழிமுறைகள், நேர்மறை சிந்தனைகளின் தேவை, விடாமுயற்சியின் சிறப்புக்கள், இலக்கினை நிர்ணயித்தல், கவ னத்தை சிதற விடாமை, பெண்கள் சுய பொருளாதார மேம்பாடு அடையும்வழிமுறைகள் ஆகியவை குறித்து விவரித்தார்.
இவ்விழாவில் தெய்வானை கல்விக் குழுமத்தின் பதிவாளர்செளந்தர்ராஜன் சிறப்புரையாற் றினார்.
அவர் பேசுகையில், தெய்வானை அம்மாள் மகளிர் கல் லூரி கடந்த 32 ஆண்டுகளாக பெண் கல்வி முன்னேற்றத்தில் ஆற்றிய பங்களிப்பு குறித்து விளக்கினார். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி மாணவியர்களை உருவாக் கியுள்ளதை பெருமையாக குறிப்பிட்டார்.
மகளிர் தினத்தின் வரலாறு, பெண் சுதந்திரத்தின் தேவைகள், பெண் உரிமை மற்றும் சமத்துவம் பற்றிய புரிதல்கள், ஆண்களின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்புகள், சமதர்ம சமுதாயத்தின் தேவை, பெண்களின் பல்துறைச் சார்ந்த வளர்ச்சி மற்றும் சாதனைகள், பெண் குறித்த அறிஞர்கள் கருத்துகள் ஆகியவை குறித்தும், தாயின் பெருமை மற்றும் சிறப்புக்களையும் எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் பொது மேலாளர் தாமோதரன் கருத்துரையாற்றினார். மேலும் சிறப்பு அழைப்பாளராக கிருபா ராஜேஷ், காயத்ரி, சுகுணா ஈஸ்வரன் பங்கேற்றனர்.
முன்னதாக கல்லூரியின் முதல்வர் பிருந்தா அறிமுக உரை யாற்றினார். வரவேற்புரையை கல்லூரி மாணவியர் கூட்டமைப்பின் தலைவி ஷி. சூரியா வழங்க, மக்கள் தொடர்பு அலுவலர் கண்மணி அன்புச்செல்வி நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago