கல்வி நிலையங்களுக்கு சொத்து வரியில் விலக்கு வேண்டும் : தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்கம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்கத்தின் நிர்வாகி கள் அவசர ஆலோசனைக் கூட்டம் பேராவூரணியில் நேற்று நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் முனைவர் ஜி.ஆர்.தர் தலைமை வகித்தார். நிர்வாகிகள் உதயகுமார், சிங்க பாண்டியன், மைவண்ணன், நடராஜன், அடைக்கலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், அரசுப்பள்ளி மாண வர்கள் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதை, குழந்தை களுக்கான இலவசக் கல்வி, கட் டாயக் கல்வி திட்ட மாணவர் களுக்கும், சீர்மிகு பள்ளித் திட்டத்தில் படிப்பவர்களுக்கும் வழங்க வகை செய்யும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்.

கரோனா காலத்தில் பாதிக் கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரி யர்களுக்கு நிவாரணம் வழங் கப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, கல்வி நிலையங் களுக்கு சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

தனியார் நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப்பள் ளிகளாக தரம் உயர்த்த அனுமதி வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும். பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக்குழு, பள்ளிகளை கலந்து ஆலோசித்து முறையான செலவுகளை ஏற்றுக்கொண்டு கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும். அல்லது அரசு ஒரு மாணவனுக்கு எவ்வளவு தொகை செலவு செய்கிறதோ அதை அனைத்துப் பள்ளிகளுக்கும், அனைத்து வகுப்புகளுக்கும் நிர்ணயம் செய்ய வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகை களும் (சைக்கிள், மடிக்கணினி) தனியார் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

கரோனா காலத்தில் பள்ளிப் பேருந்துகளுக்கான சாலை வரி முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

தொடர்ந்து, செய்தியாளர் களிடம் ஜி.ஆர்.தர் கூறும்போது, “எங்கள் கோரிக்கைகளை நிறை வேற்ற எந்த அரசியல் கட்சி உறுதியளிக்கிறதோ, அந்த கட்சிக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் சங்கம் ஆதர வளிக்கும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்