திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில், வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான வே.சாந்தா முன்னிலையில் நேற்று நடை பெற்றது.
பின்னர், ஆட்சியர் கூறியது: ஏப்.6-ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் பொதுமக்கள் அனை வரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியு றுத்தி, திருவாரூர் மாவட்டத் தின் அனைத்து பகுதிகளிலும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, பொதுமக்கள் பரிசு பொருளுக்கோ, பணத்துக்கோ செவி சாய்க்காமல் நேர்மையான முறையில் வாக்களிப்பது நமது உரிமை என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும்.
திருவாரூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago