ராணிப்பேட்டையில் நடைபெற்ற வாகன தணிக்கையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப் பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பறக்கும் படை மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ராணிப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகம் அருகே உதவி கோட்டப் பொறியாளர் பிரகாஷ் தலைமையிலான தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சென்னை நோக்கிச் சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத் திருந்த ரூ.80 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். அந்தப் பணத்தை ராணிப்பேட்டை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான வாலாஜா வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், அந்தப் பணத்தை வாலாஜா சார் கருவூலத்தில் வருவாய்த் துறையினர் ஒப்படைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago