வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளின்படி உள்ளூர் கேபிள் டிவி, தொலைக்காட்சி சேனல்கள், சமூக வலைதளங் களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய முன் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்ட அளவில் ஊடகச்சான்று மற்றும் கண்காணிப்பு குழு மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கான கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வேலூரில் உள்ள தனியார் கேபிள் டிவி ஒன்றில் கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் அனுமதியில்லாமல் அதிமுக சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. முன் அனுமதி இல்லாமல் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த விளம்பரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு வேலூர் சட்டப்பேரவை தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷ் நோட்டீஸ் அளித்துள்ளார்.
எனவே, வேலூர் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொலைக்காட்சி மூலம் செய்யும் விளம்பரங்கள் அனைத்தும் ஊடக குழுவினரால் முறையான அனுமதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் தேர்தல் நடத்தை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago