திருப்பத்தூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவின ரால் பறிமுதல் செய்யப்படும் பணத்துக்கான உரிய ஆவணங்களை கருவூல அலுவலரிடம் சமர்ப்பித்து பணத்தை திரும்பப் பெறலாம் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படையினர், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் காவல் துறையினர் சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டப்பேரவை தேர்தலை யொட்டி ரூ.10 ஆயிரத்துக்கு சமமான வெகுமதி உள்ள பொருட்கள், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை பொதுமக்கள் கொண்டு செல்லும் போது, அதற்கான ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவு றுத்தியுள்ளது.
வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கவே இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு தேவை களுக்காக பணமும், வியாபாரிகள் தங்களது தொழிலுக்காக பொருட் களை கொண்டு செல்லும்போது அதற்கான ஆவணங்களை சரியாக வைத்திருக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் பிரிவு வாயிலாக தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
எனவே, ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திரும்பப்பெற வேண்டு மென்றால், சம்பந்தப்பட்டவர்கள் ஆதார் அட்டை, பான்கார்டு, பறிமுதல் செய்யப்பட்ட பணம் அல்லதுபொருட்களுக்கான ஆதாரங்களை, ‘திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கருவூல அலுவலர், திருப்பத்தூர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) திருப்பத்தூர் ஆகியோரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.சமர்ப்பிக்கப்படும் ஆதாரங்கள் உண்மையான நேர்மையான ஆதாரங்களாக இருக்கும் பட்சத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தொகை, பொருட்கள் திரும்ப வழங்கப்படும்.
இது தொடர்பாக மேலும் விவரம்தேவைப்படுவோர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரின் (கணக்குகள்) கைப்பேசி 63808-60980 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவித் துள்ளார்
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago