வேலூர் நம் சந்தையில் - வேளாண் கல்லூரி மாணவிகள் ஆய்வு :

By செய்திப்பிரிவு

வேலூர் நம் சந்தை குறித்தும் விவசாயிகளின் பொருளாதார வாய்ப்புகள் குறித்த விவரங்களை வேளாண் கல்லூரி மாணவிகள் திரட்டினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புறங்களில் 2 மாதங்கள் தங்கியிருந்து வேளாண் அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, அக்கல்லூரி மாணவிகள் திவ்யா, செஞ்சு மௌனிகா, ஹரிபிரியா, வித்யா, சரஸ்வதி, யுவ,மௌனிகா ஆகியோர் கொண்ட குழுவினர் வேலூரைச் சுற்றியுள்ள சதுப்பேரி, சிறுகாஞ்சி, வெங்கடாபுரம், அலமேலுமங்காபுரம், பெருமுகை, அப்துல்லாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வேளாண் அனுபவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, வேலூர் ஏலகிரி அரங்க வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற நம்சந்தைக்கு சென்ற மாணவிகள், அங்குள்ள விவசாயிகள் குறித்தும் அவர்கள் விற்பனை செய்யும் காய்கறிகள், பொருளாதார வாய்ப்புகள் குறித்த விவரங்களையும் திரட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்