திருப்பத்தூரில் - வாகன சோதனையில் : ரூ.2.45 லட்சம் பறிமுதல் : பறக்கும் படையினர் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

திருப்பத்தூரில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட இருவரிடம் ரூ.2.45 லட்சத்தை பறக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வெங்களாபுரம் பகுதியில் பறக்கும் படையினர் நேற்று அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக தருமபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த விவேக் என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்தார்.

ரூ.1.10 லட்சம் பறிமுதல்

அவரை மடக்கி சோதனையிட்ட போது விவேக்கிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1.10 லட்சம் பணம் எடுத்து வந்தது தெரியவந்தது. பின்னர் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செயதனர்.

வாகன சோதனையில்..

அதேபோல, திருப்பத்தூர் - சேலம் பிரதான சாலையில் அமைக்கப்பட்டுள்ள தோரணம்பதி சோதனைச்சாவடியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் ஊத்தங் கரையைச் சேர்ந்த ரகுநாதன் என்பவர் கொண்டு வந்த ரூ.1.35 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர் .

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்