பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க - சமூக இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும் : மகளிர் தின விழா கருத்தரங்கில் வலியுறுத்தல்

பெண்களுக்கு எதிரான வன்முறை களைத் தடுக்க சமூக இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும் என தஞ்சாவூரில் நடைபெற்ற மகளிர் தின விழா கருத்தரங்கில் வலியுறுத் தப்பட்டது.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் மகளிர் தின விழா கருத்தரங்கு, தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கலை இலக்கியப் பெருமன்ற மாநகரத் தலைவர் எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். கருத்தரங்குக்கு, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் முனைவர் காமராசர் தலைமை வகித்து பேசியதாவது:

கல்வி, வேலைவாய்ப்பு, விண் வெளி, ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆண் களுக்கு நிகராக பெண்கள் முன் னேறி வந்துகொண்டிருக்கின்றனர். இருப்பினும், பெண்களுக்கு எதிரான பாலியல் உள்ளிட்ட வன்முறைகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன, இவற்றை சட்டரீதியாக மட்டும் தடுத்துவிட முடியாது. இதற்கான சமூக இயக் கத்தை, போராட்டத்தை முன் னெடுக்க வேண்டும் என்றார்.

‘பெண்களுக்கான உரிமைகள்-சட்டங்கள்' என்ற தலைப்பில் வழக்கறிஞர் ச.ஜெயந்தி, ‘விறகாய் எரியும் வீணைகள்' என்ற தலைப்பில் முனைவர் இரா.பெ.வெற்றிச்செல்வி ஆகியோர் பேசினர். கவிஞர் நா.விசுவநாதன், ச.புகழேந்தி, கவிஞர் வல்லம் தாஜ்பால், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார் ஆகி யோர், மகளிர் தினவிழா கருத்தரங் கத்தை வாழ்த்திப் பேசினர்.

நிகழ்ச்சியை மாநகர துணைத் தலைவர் பொ.திராவிடமணி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி யில், டாக்டர் புலவர் துரையரசனார்- வைரம்பாள் அறக்கட்டளை சார்பில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து போராடி வருகின்ற மற்றும் தன் உழைப்பின் மூலம் அன்றாடம் வாழ்க்கையை நடத்துகின்ற ம.விஜயலட்சுமி, எஸ்தர்லீமா, தாமரைச்செல்வி, முனியம்மாள் உள்ளிட்டோருக்கு, 2021-க்கான சாதனை மகளிர் விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் வெ.சேவையா, துணைச் செயலாளர் துரை.மதிவாணன், அறக்கட்டளைத் தலைவர் துரை.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில், துவாரகா சாமிநாதன் நன்றி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE