தேர்தல் விழிப்புணர்வுக்காக - அரசு பள்ளியில் மாதிரி வாக்குப்பதிவு :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் சார்பில் நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. இதில், தேர்தல் குறித்தும் வாக்காளர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,காமராஜர் வீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குப் பதிவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், தலைமை ஆசிரியர் முன்னிலையில் வகுப்பறைகளில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது.

மேலும், மாணவிகள் சிலர் தேர்தல் அதிகாரி, வாக்குசாவடி மைய அலுவலர், தேர்தல் பணியாளர்களாகவும் செயல்பட்டனர். மாணவிகள் சிலர் வாக்காளர்களாக செயல்பட்டு வாக்குப்பதிவு செய்தனர். இதில், வாக்குப்பதிவின்போது தேர்தல் அதிகாரிகள் கடைபிடிக்கும் நடைமுறைகளை பின்பற்றி மாதிரி வாக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மத்தியில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்