நார்த்தாமலை அருகே நேற்று அதி காலை கதிர் அறுவடை இயந்திரம் மோதி தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 29 பேர் காய மடைந்தனர்.
சென்னையில் இருந்து ராமேசுவரத் துக்கு நேற்று முன்தினம் இரவு 30 பயணிகளுடன் தனியார் பேருந்து புறப்பட்டது. இப்பேருந்தை சிவகங்கை மாவட்டம் வண்டல் அருகே மரைக்கான் குடியிருப்பைச் சேர்ந்த செல்லத்துரை மகன் விஜயராஜ்(35) ஓட்டினார்.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தா மலை அருகே பொம்மாடிமலை பகுதி யில் நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் மீது எதிரே வந்த கதிர் அறுவடை இயந்திரம் மோதியதில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே விநாயகர் காலனி முதல் தெருவைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் வெங்கடேஷ்(23), ராமநாதபுரம் வண்ணாங்குண்டு பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டி மனைவி சரண்யா(26) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த ஓட்டுநர் உள்ளிட்ட 29 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். கீரனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கதிர் அறுவடை இயந்திர ஓட்டுநரான திருவண்ணாமலையைச் சேர்ந்த பழனி மகன் சந்தோஷை(25) கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
பாளையங்கோட்டை வெங்கடேஷ்(23) விபத்தில் உயிரிழந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago