திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் - தேர்தல் விதிமீறிய 33 பேர் மீது வழக்கு :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள் ளன.

இதையடுத்து, திருவாரூர் மாவட் டம் மன்னார்குடி நகர காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி களில் அனுமதியின்றி துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி முகமது இஸ்மாயில், நெடுவாக்கோட்டை பகுதியில் அனுமதியின்றி பிளக்ஸ் போர்டு வைத்திருந்த அதிமுகவைச் சேர்ந்த ராமச்சந்திரன், அமமுக வைச் சேர்ந்த அய்யா ஆறுமுகம், காந்தி சாலை மாயாண்டி, பரவாக்கோட்டை காவல் நிலை யத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி ஒலி பெருக்கி விளம்பரத்தில் ஈடுபட்ட அழ கேஸ்வரன், தலையாமங்கலம் காவல் சரகத்துக்கு உட்பட்ட மேலக்காடு பகுதியில் அனுமதி யின்றி பிளக்ஸ் போர்டு வைத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி சத்யபாமா, முத்துப்பேட்டையில் தேர்தல் விதிமுறைகளை மீறிய தாக ரவி, திமுக ஒன்றிய பிரதிநிதி ஆறுமுக சிவக்குமார், மங்கலூர் வடக்குத்தெரு மனோஜ் ஆகி யோர் உட்பட மன்னார்குடி மற்றும் முத்துப்பேட்டை பகுதி களில் மட்டும் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாகை, மயிலாடுதுறையில்...

இதேபோல, தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக, நாகை மாவட்டத்தில் 18 பேர் மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 பேர் என மொத்தம் 21 பேர் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்