கடல்சார் பழங் குடியினர் பட்டியலில் சேர்த்து - மீனவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் : ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கடல்சார் பழங்குடியினர் பட்டிய லில் சேர்த்து மீனவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மீனவர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மீனவர் பேரவையின் மாநில ஆலோசனைக் கூட்டம், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நேற்று முன் தினம் நடைபெற்றது. தமிழ் நாடு மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் தாஜூதீன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ராஜமாணிக்கம் வரவேற்றார்.

கூட்டத்தில், டீசல் மீது விதிக் கப்படும் வரிகளை நீக்கம் செய்து, உற்பத்தி விலைக்கே டீசலை வழங்க வேண்டும். அரசு டீசல் மானியத்தை உயர்த்தி விசைப்படகுகளுக்கு 4 ஆயிரம் லிட்டரும், நாட்டுப் படகுகளுக்கு 600 லிட்டரும் வழங்க வேண்டும். மீனவர்கள் பிடித்துவரும் ஏற்று மதி தரமிக்க இறால் மீன்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். மீனவர்களை கடல்சார் பழங் குடியினர் பட்டியலில் சேர்த்து, இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மல்லிப்பட்டினம், சேதுபாவாசத் திரம் கடல் பகுதிகளில் தூண் டில் வளைவுகளை அமைத்துத் தரவேண்டும். நாட்டுப்படகுகளுக்கென கடல் பகுதிகளில் சிறு துறைமுகங்களை அமைத்துத் தரவேண்டும். மீனவர் கூட்டுறவு சங்கங்களில் மீனவர்கள் பெற்ற கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். மீனவர்களுக்கென தனியாக வங்கிகளை ஏற்படுத்த வேண்டும். நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் மீனவர்க ளுக்கென தனித்தொகுதி ஏற்ப டுத்த வேண்டும்.

இந்த கோரிக்கைகளை நிறை வேற்றுவதாக உத்தரவாதம் அளிக் கும் கட்சிகளுக்கு வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஆதரவு தெரி வித்து, வாக்களிப்பது. டீசல் விலை உயர்வைக் கண்டித்து மார்ச் 14-ம் தேதி அனைத்து விசைப் படகு களிலும் கருப்புக் கொடியேற்றி மீன்பிடிக்கச் செல்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்