உதகையில் பெண்ணை எரித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே பைக்காரா பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (எ) ஆனந்தகுமார்(48). கூலி தொழிலாளி. திருமணமான இவர், மனைவியைபிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ஆனந்தகுமாருக் கும், அதே பகுதியில் கணவரை இழந்து வாழ்ந்து வந்த ஆயிஷா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் மற்றொரு நபருடன் ஆயிஷா பழகியதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த ஆனந்தகுமார், ஆயிஷாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீயும் வைத்துள்ளார். படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஆயிஷா இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கொலை வழக்குப் பதிந்த பைக்காரா போலீஸார், ஆனந்தகுமாரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கோவையில் சிகிச்சை பெற்றபோது நீதிபதியிடம் ஆயிஷா மரண வாக்குமூலம் அளித்தார். அவரது முதல் கணவருக்கு 2 குழந்தைகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து,பெண்ணை தீ வைத்து எரித்து கொலை செய்த ஆனந்தகுமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி அருணாச்சலம் உத்தரவிட்டார்.
அரசு தரப்பில் வழக்கறிஞர் மாலினி பிரபாகரன் ஆஜராகினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago