வாகனத் தணிக்கை; ஆட்சியர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் வளம் பாலம், செல்லாண்டியம்மன் கோயில் அருகில், பல்லடம் தொகுதி அவிநாசிபாளையம், தாராபுரம் தொகுதி ஆகிய பகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான க.விஜயகார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டு, அனைத்து வாகனங்களையும் முழுமையாக சோதனை செய்வதுடன், அந்த வாகனங்களின் விவரங்களையும் முழுமையாக பதிவிட வேண்டும் என அலுவலர்களை அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து திருப்பூர் காங்கயம்பாளையம்புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, தாராபுரம் புனித அந்தோனியார் நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களையும் ஆய்வு செய்தார். வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் வாக்குச்சாவடி மையத்தில் ஏற்படுத்திட வேண்டும் என, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்