திருப்பூரில் வாகன சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட வெண்கலச் சிலைகள் தொடர்பாக, வருவாய்த் துறையினர் அளித்த தகவலின் பேரில் வடக்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.
தேர்தல் விதிகளை ஒட்டி, திருப்பூர் மண்ணரை குளத்துப்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூரூ ஜலகள்ளியை சேர்ந்த சையது ரசூல் அஹமது (38) என்பவர் ஓட்டி வந்த காரில், அவரது நண்பர் ரமேஷ் (35) இருந்துள்ளார். வாகனத்தை சோதனைசெய்ததில், பின்புறம் வெண்கலச்சிலைகள் இருப்பதை கண்டறிந்த னர். சிலை கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் இல்லாத நிலையில், வெண்கலத்தில் இருந்த கண்ணன், ராதை சிலைகள், பீடம் மற்றும் அலங்கார வளைவுகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வருவாய்த் துறையினர் அளித்த தகவலின்பேரில் சிலைகளை கைப்பற்றிய போலீஸார், சையதுரசூல் அஹமது, ரமேஷ் ஆகியோ ரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago