செங்கல்பட்டு மாவட்டத்தில் - காவல் நிலையங்களில் 145 துப்பாக்கிகள் ஒப்படைப்பு :

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள25 காவல் நிலையங்களில் 145 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டன.

தமிழகத்தை பொறுத்தவரை விஐபிக்கள், விவிஐபிக்கள் சுய பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் வங்கி பாதுகாப்பு, விலங்கு தாக்குதலில் இருந்து விவசாயிகள் தங்களை பாதுகாக்கவும் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் சமயத்தில் கைத்துப்பாக்கி, நாட்டுத் துப்பாக்கி வைத்திருக்கக் கூடாது என்பது தேர்தல் விதிகளில் ஒன்றாகும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படிசட்டம், ஒழுங்கு பாதுகாப்பு கருதி, உரிமம்பெற்ற துப்பாக்கிகளை வைத்திருப்போா் அந்தந்த எல்லைக்கு உட்பட்ட காவல்நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்என மாவட்ட காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 25 காவல் நிலைய எல்லையில், 152 பேர் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்துள்ளனர். இவர்களில் 145 பேர் தங்கள் துப்பாக்கிகளை அந்தந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இன்னும் 7 பேர் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்குத் துப்பாக்கிகளை ஒப்படைக்கவலியுறுத்தி காவல் துறை மூலம் கடிதம்அனுப்பப்பட்டுள்ளது. துப்பாக்கிகளைஒப்படைக்காமல் பதுக்கி வைத்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையங்களில் வைக்கப்படும் துப்பாக்கிகள் தேர்தல் பணிகள் முடிவுற்றதும் திரும்ப ஒப்படைக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்