காஞ்சிபுரம் பகுதியில் மாதிரி வாக்குப் பதிவு :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகள்உள்ளன. இந்த 4 தொகுதிகளுக்கும் தேவையான வாக்குப் பதிவுஇயந்திரங்கள் மற்றும் வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரங்களில் 5 சதவீத இயந்திரங்கள் ஏற்கெனவே மாதிரி வாக்குப் பதிவு நடத்த அனுப்பி வைக்கப்பட்டன. அதன் மூலம் மாதிரி வாக்குப் பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

அதன் அடிப்படையில் பேருந்து நிலையத்தில் மாதிரி வாக்குப் பதிவு மற்றும் வாக்குப் பதிவு குறித்த செயல் விளக்கம் நடைபெற்றது. இந்த மாதிரி வாக்குப் பதிவை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மகேஸ்வரி தொடங்கி வைத்தார்.

பொதுமக்கள் அனைவருக்கும் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்குப் பதிவை உறுதிசெய்யும் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. மேலும் இந்த முகாமில் மாதிரிவாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, மாதிரி சின்னங்கள் பொருத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பாக செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின்போது ஆட்சியர் மகேஸ்வரி அனைத்து வாக்காளர்களும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி தேர்தல்விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.ஜெயசுதா, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா, நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நிர்மலா உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்