திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், வட்டாட்சியர் செல்வ குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை, நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டது. அப்போது, ஆந்திர மாநிலம், நெல்லூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தை சோதனை யிட்டதில், ஒரு பயணியின் பையில் 15 கிலோ கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கஞ்சா கொண்டு வந்தவர் தேனியைச் சேர்ந்த ராஜா என்பது தெரிய வந்தது. இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago