தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைமையில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடைபெற்று தொகுதி பங்கீடும் முடிவாகி வருகிறது.
ஆனாலும் இதுவரை எந்ததெந் தக் கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்பது இறுதியாகவில்லை.
இதற்கிடையே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம் மற்றும்கள்ளக்குறிச்சியில் சுவர் விளம் பரத்தில் திமுகவினர் அதிமுகவைக் காட்டிலும் முந்தி நிற்கின்றனர்.
ரிஷிவந்தியம் தொகுதியில் கிளிபாடி பாவந்தூர், சோழபாண்டிய புரம், ஆதி திருவரங்கம், பகண்டை கூட்ரோடு மூங்கில்துறைப்பட்டு உள்ளிட்ட 116 கிராமங்களிலும் சுவர் விளம்பரத்தில் வேட்பாளர் பெயருக்கு மட்டும் இடம் விட்டு திமுகவினர் தங்கள் சின்னத்தை வரைந்து வருகின்றனர்.
இதன் மூலம் ரிஷிவந்தியம் தொகுதியில் திமுக தான் மீண்டும் போட்டியிடுகிறது என சொல்லாமல் சொல்கின்றனர். இது திமுக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களிடம் முகச் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை தான் கள்ளக்குறிச்சி தொகுதியிலும் நிலவுகிறது.
இது தொடர்பாக சின்னம் வரைந்து வரும் திமுகவினரிடம் பேச்சுக் கொடுத்தபோது, இந்த தொகுதியில் திமுக தான் வலிமையாக இருக்கிறது. எனவே கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்க வாய்ப்பில்லை என்பதை அறிந்தே, கட்டிட உரிமையாளர்களின் உரிய அனுமதியோடு, சுவர் விளம்பரத்தில் ஈடுபடுவதாகத் தெரிவித்தனர்.
சங்கராபுரத்திலும் உதயசூரி யன் சின்னத்தை வரைந்திருப்பதோடு, திமுகவினர் தங்கள் சின்னத்தை வரைந்து, ஏற்கெனவே இங்கு போட்டியிட்ட உதயசூரியனை முன்னலைப்படுத்தி வருகின்றனர். அக்கட்சியில் அவருக்கு உள்ள எதிர்கோஷ்டி, வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்னரே இப்படி விளம்பரப்படுத்துவதா என்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago