மாணவர்கள் 100 சதவீதம் வாக்க ளிப்பதைக் கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலர் இரா.கண்ணன் தெரிவித்தார்.
சட்டப் பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற கல்லூரி மாணவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்துக் கல்லூரி முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் இரா.கண்ணன் பேசியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்களைத் தேர்தலில் பங்கேற்க வைப்பது கல்லூரி முதல்வர்களின் கடமை. மாணவர்களிடம் வாக்களிக்கக் கூடிய மனநிலையை ஏற்படுத்த வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த தேர்தலில் வாக்குப்பதிவு குறைவாகப் பதிவான இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். கல்லூரி மாணவர்கள் மூலம் இருசக்கர வாகனப் பேரணி, ரங்கோலி, கலை நிகழ்ச்சிகள், மனிதச் சங்கிலி, கையெழுத்து இயக்கம், ஓவியப் போட்டி, மினி மராத்தான் ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி நூறு சதவீத வாக்குப் பதிவை எட்டுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago