உரிமம் பெற்று துப்பாக்கி வைத் திருப்பவர்கள், அதை வரும் 15-ம் தேதிக்குள் காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் அறி வுறுத்தியுள்ளார்.
தனி நபர்கள் தங்களின் பாது காப்பாக உரிய அனுமதி பெற்று வைத்துள்ள துப்பாக்கிகளை அந்தந்த காவல்நிலையங்களில் ஒப்படைக் குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலின்போது சட்டம், ஒழுங்கை முறையாக பராமரிக்க ஏதுவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி அனைத்து வகை துப்பாக்கிகளையும் வரும் 15-ம் தேதிக்குள் அந்தந்த பகுதியில் உள்ள காவல்நிலையங்களிலோ அல்லது உரிமம் பெற்ற டீலரிடமோ ஒப்படைக்க வேண்டும். தேர்தல் முடிவடைந்த பிறகு இவற்றை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago